Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நவீன தொழில்நுட்ப சைபர் கிரைம் அலுவலகம் திறப்பு: முதலமைச்சர் ரங்கசாமி

    குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நவீன தொழில்நுட்ப சைபர் கிரைம் அலுவலகம் திறப்பு: முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரி கோரிமேட்டில் சைபர் க்ரைம் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி, மூலக்குளத்தில் ரெட்டியார்பாளையம் காவல் நிலைய கட்டுமான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

    புதுச்சேரி கோரிமேட்டில் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் (cyber crime police station) அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    அதேபோல் மூலகுளம் பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதிலும் முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருந்ததாகஙும், அதற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று கோடி ரூபாயில் கட்டப்படும் இந்த கட்டிடம் ஆறு மாதத்திற்குள் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கோரிமேடு பகுதியில் சைபர் கிரைமிற்காக புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் நவீன குற்றங்களை தடுப்பதற்காக முழுமையான வசதிகளுடன் சைபர் கிரைம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 1600 சைபர் கிரைம் குற்றங்களுக்கான தகவல்கள் வந்துள்ளது.

    அதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள குற்றங்களை விரைந்து முடிப்பதற்காக தற்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பமான சைபர் கிரைம்கள் வரும்போது அதனை கண்டுபிடிப்பதற்காக நவீன தொழில்நுட்ப அடங்கிய சைபர் கிரைம் அலுவலகம் தேவைப்படுகிறது அதற்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதையும் படிங்ககால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; முன்ஜாமீனை மறுத்த உயர்நீதிமன்றம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....