Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டருக்கு எதிராக ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்; பதில் சொன்ன மஸ்க்

    ட்விட்டருக்கு எதிராக ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்; பதில் சொன்ன மஸ்க்

    ட்விட்டரில் நிகழும் ராஜிநாமா குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். 

    எலான் மஸ்க் ட்விட்டரை வசப்படுதியதிலிருந்து தினம் ஒரு அதிர்ச்சிகரமான செயலை, தகவலை அறிவித்துக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில், ட்விட்டரை மேல்நோக்கி கொண்டுச்செல்ல உள்ளதாகவும், ஆதலால், அனைத்து ஊழியர்களும் இப்போது இருப்பதை விட அதிக தீவிரமாக நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 

    ஆனால், இதற்காக எலான் மஸ்க் அமல்படுத்தும் புதிய ரூல்களுக்கு, பல ஊழியர்களும் நோ சொல்லியிருப்பதாகவே தகவல்கள் வெளியாகின்றன. இதனால், பல டிவிட்டர் ஊழியர்கள், தங்களது ராஜிநாமா முடிவை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். 

    பலரும் குழு குழுவாக, அணி அணியாக ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதாகவும், டிவிட்டர் செயல்பாட்டின் மிக முக்கியமான பொறியாளர் குழு முழுவதுமாக அல்லது கிட்டத்தட்ட முழுவதுமாக ராஜிநாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    இந்த தகவல்கள் குறித்து எலான் மஸ்க் தெரிவிக்கையில், நான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றும், மிகச் சிறந்த நபர்கள் இருப்பார்கள். எனவே, நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இருப்பினும், ட்விட்டர் குறித்த பல்வேறு மீம்ஸ்கள் பரவி வருகின்றன. ட்விட்டரிலேயே #goodbyetwitter , #riptwitter போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதனால், ட்விட்டரின் நிலைமை என்ன? என்று பதிவுகள் ட்விட்டரில் தெறித்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இப்படியாக பதிவுகள் வர, எலான் மஸ்க் நாங்கள் டிவிட்டரை உயிரோடு வைத்திருப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட்: ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....