Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இப்படி கூட திருமணத்தை நிறுத்தலாமா? லெஹன்ஹா உடையால் மணமகள் அதிர்ச்சி

    இப்படி கூட திருமணத்தை நிறுத்தலாமா? லெஹன்ஹா உடையால் மணமகள் அதிர்ச்சி

    குறைந்த விலையில் லெகங்ஹா வாங்கி தந்ததற்காக திருமணத்தையே நிறுத்தியுள்ளார் மணப்பெண். 

    ஒரு திருமணம் நடைபெறுவதற்கு ஆயிரம் பொய்கள் சொல்ல வேண்டும் என்று கூறுவது வழக்கம். அப்படி பொய்யைக் கூட உண்மை போல் சொல்லி பல திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, சிறிய பொய் கூறினால் கல்யாணம் என்ன நின்றுவிடவா போகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால், அப்படி ஒரு திருமணம் நின்று இருக்கிறது. 

    குடும்ப பிரச்சனைகளால் கல்யாணம் நின்றதை பார்த்திருப்போம்; ஏன் நகை, பணம் பிரச்னையால், மணப்பெண் மணமகன் இருவரிடையே ஏற்படும் பிரச்சனையால் கூட திருமணம் நின்றிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், திருமணத்திற்கு அணியும் ஆடையின் விலை குறைவு என்பதால் மணப்பெண் தனது திருமணத்தையே நிறுத்தியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்களா? அப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்தவர்கள் மணப்பெண்ணும் மணமகனும். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி இவர்களுக்கு திருமண நாள் குறிக்கப்பட்டது. 

    இதையும் படிங்கதிருநங்கைகளிடம் சில்மிஷம் செய்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்! ஜாமினில் வெளிவந்தவருக்கு நிகழ்ந்த பயங்கரம்!

    மணமகனுக்கான திருமண உடையை மணப்பெண் வீட்டாரும், மணப்பெண்ணுக்கான திருமண உடையை மணமகன் வீட்டாரும் எடுத்து தருவது வழக்கம். அந்த வகையில் மணப்பெண்ணுக்கான லெகங்ஹா உடையை மணமகன் வீட்டார், மிகவும் பிரத்தியேகமாக வடிவமைத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். 

    இருப்பினும் மணப்பெண்ணுக்கு அந்த உடையை பார்த்ததும் திருப்தி ஏற்படவில்லை. அதனால், அந்த உடை குறித்து விசாரித்த மணப்பெண்ணுக்கு அப்போது தான் காத்திருந்தது அதிர்ச்சி. அந்த லெகன்ஹா உடையை வெறும் 10 ஆயிரத்துக்கு தான் மணமகன் வீட்டார் வாங்கியிருக்கின்றனர். 

    இதனை அறிந்த மணப்பெண், மிகவும் ஆத்திரமடைந்து மணமகன் வீட்டாரிடம் கடிந்து கொண்டார். உடனே மணமகனின் தந்தை தனது ஏடிஎம் காடுகளை கொடுத்து, இதை வைத்து பிடித்த உடையை வாங்கிக்கொள்ளுமாறு வருங்கால மருமகளிடம் கூறி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த மணப்பெண் கோபம் அடைந்து, திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார். இதனால், இரு வீட்டாரிடையே மோதல் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, மணமகன் வீட்டார் கோடாவாலி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிறகு இரு தரப்புக்கு இடையே காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுக்கு நஷ்ட ஈடு ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்துள்ளது 

    குறைந்த விலையில் லெகன்ஹா வாங்கி கொடுத்ததற்காக திருமணத்தையே நிறுத்திய மணப்பெண் செய்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    ஆண்களே மணமகன் ஆகும் முன் சற்று உஷாராகுங்கள்… 

    இதையும் படிங்க‘எனக்கு அது பொருந்தாது’ என உரக்க கூறிய நயன்தாரா – பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....