Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியுடன் ஒற்றுமை பயணத்தில் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்

    ராகுல் காந்தியுடன் ஒற்றுமை பயணத்தில் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இன்று வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தார். 

    மக்களவை தேர்தலுக்காக மக்களவை ஒன்று திரட்டும் பொருட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை என்ற பெயரில் நடைப்பயணத்தை தொடங்கினார். 

    இந்நிலையில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் இந்த நடைபயணம் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இன்று நவம்பர் 18 ஆம் தேதி அகோலா மாவட்டத்தின் பாலாப்பூர் பகுதியில் காலை நடைப்பயணம் தொடங்கியது. 

    இந்த நடைப்பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில், சமூக செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான துஷார் காந்தி, ஷேகான் என்ற பகுதியில் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார். 

    மேலும், தான் பிறந்த ஊரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி என துஷார் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    இது தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

     

    இதையும் படிங்கவ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கம் தொடக்கம்: சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....