Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்30 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்க 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன ஆணை ஏன்?...

    30 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்க 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன ஆணை ஏன்? மல்லிகார்ஜுன கார்கே

    அரசுத் துறைகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்க 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன கடிதங்களை பிரதமர் வழங்கி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்  குறிப்பிட்டுள்ளார். 

    முன்னதாக வேலை இன்மையினை கட்டுப்படுத்தும் விதமாக சமீபத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் 75 ஆயிரம் பேருக்கு பனி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது:

    ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அப்படியானால், 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும்.

    பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், பிரதமர் மோடி 75,000 நியமன கடிதங்களை மட்டுமே வழங்கியுள்ளார்.

    பிரதமர் மோடியின் நேரடி மத்திய செயலகத்தின் கீழ் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்?

    இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்.,கைது செய்த போலீசார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....