Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரயில்வேயில் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து மனம் திறந்த ரயில்வே இயக்குநரகம்!

    ரயில்வேயில் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து மனம் திறந்த ரயில்வே இயக்குநரகம்!

    மார்ச் 2023-க்குள், ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறை நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 35,281 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை வரும் மார்ச் 2023-ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று இந்திய ரயில்வே செயல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணியமர்தல் அனைத்தும் மத்திய வேலைவாய்ப்பு அறிவிப்பு -2019-ஆம் ஆண்டின் அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய ரயில்வே காலியிடங்கள் குறித்த இந்திய ரயில்வேயின் செயல் இயக்குநர் (தகவல் மற்றும் விளம்பரம்) அமிதாப் சர்மா கூறியதாவது: 

    ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுகின்றனர். இதனால் தகுதியுடைய பலர் விண்ணப்பத்தாரர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலைகளின் தேர்வுகளின் முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை.

    ரயில்வேயின் அனைத்து நிலைகளின் தேர்வு முடிவுகளை தனித்தனியாகப் பெற ரயில்வே தயாராகி வருகிறது, இதனால் அதிக ரயில்வே ஆர்வலர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும். 

    இவ்வாறு அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பெற வேண்டிய முக்கிய சான்றிதழ் பற்றி தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....