Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நயன்தாராவின் அடுத்த திரைப்படம் இவருடனா? - வெளிவந்த் அப்டேட்!

    நயன்தாராவின் அடுத்த திரைப்படம் இவருடனா? – வெளிவந்த் அப்டேட்!

    நயன்தாராவின் 81-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர், நயன்தாரா. 2005-ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த நயன்தாரா 17 வருடத்தைத் தாண்டி திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 

    லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுமளவிற்கு நயன்தாராவின் வளர்ச்சி என்பது திரையுலகில் நிகழ்ந்திருக்கிறது. தன் நடிப்பின் மூலம் பெரும் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். 

    இதைத்தொடர்ந்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நயன்தாராவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் 81-வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. 

     எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி போன்ற திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமா ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. 

    விரைவில், இத்திரைப்படத்தில் பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க‘இது விஜய்க்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல’ – தெலுங்கு திரைத்துறையை எச்சரித்த சீமான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....