Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட்: 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

    வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட்: ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

    நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (நவம்பர் 18) முற்பகல் 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

    விண்வெளித்துறையில் தனியார் துறை பங்கேற்பதனை எளிமையாக்க கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோவின் கீழ் இயங்கி வரும் ஹைதிராபாத்தை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் இந்த புதிய ராக்கெட்டை தயார் செய்தது. 

    இந்திய வெண்வெளித்து திட்டத்தின் நிறுவனர் ‘விக்ரம் சாராபாய்’ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த புதிய ராக்கெட்டுக்கு ‘விக்ரம்-எஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    வணிக நோக்கத்திற்காக இந்த ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ள 2.5 கிலோ எடையுள்ள பன்-சாட்  என்ற செயற்கைக்கோளும் இடம்பெற்றுள்ளது. இந்த செயற்கைக்கோளை இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (நவம்பர் 18) முற்பகல் 11.30 மணிக்கு நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள 3 செயற்கைக்கோள்கள் பூமியின் மேற்பரப்பில் 120 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு, ஆய்வு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். 

    இதன்மூலம் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முதல் இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் நிறுவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க9 மணி நேரத்திற்கு பிறகு பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பிய ‘ஓரியன்’ விண்கலம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....