Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியான நயன்தாராவின் புதிய திரைப்பட டீசர்; 'இன்டர்வெல்' இல்லாத ஒரு படம்..

    வெளியான நயன்தாராவின் புதிய திரைப்பட டீசர்; ‘இன்டர்வெல்’ இல்லாத ஒரு படம்..

    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது

    மாயா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர், அஸ்வின் சரவணன். இவரின் இயக்கத்தில் வெளிவந்த இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து, அஸ்வின் இயக்கத்தில் எந்த திரைப்படம் வெளியாகும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்து வந்தது. 

    அப்போதுதான், நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகவுள்ள ஹாரர் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், படத்திற்கு ‘கனெக்ட்’ என்று பெயரிடப்பட்டது. இத்திரைப்படத்தில், சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    மாயா திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அஸ்வின் மற்றும் நயன்தாரா இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹாரர் கான்செப்டிலே திரைப்படம் உள்ளது. 

    மேலும், 95 நிமிட கால அளவைக் கொண்டுள்ள கனெக்ட் திரைப்படம் இடைவேளை ஏதுமின்றி திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இத்திரைப்படம், கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

     

    இதையும் படிங்க‘இப்போதும் எப்போதும் லவ் யூ தங்கமே!’ நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....