Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மின் கட்டண அளவீடு: இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் கட்ட நடவடிக்கை.,விக்கிரம ராஜா

    மின் கட்டண அளவீடு: இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் கட்ட நடவடிக்கை.,விக்கிரம ராஜா

    மின் கட்டண அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் மின் கட்டணம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
    இதில் வணிக சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா, கரோனா காலகட்டத்திற்கு சென்று இப்பொழுதுதான் வியாபாரிகள் சற்று வளர்ச்சி காண்கிறார்கள். டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரால் வணிகவரித் துறை அதிகாரிகள் அதிகமாக அபராதத்தை விதித்து வருகின்றனர். தமிழக அரசு இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், கிரிப்டோ கரன்சி பயன்படுத்தும் முறையை வணிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண் விளைபொருள் கொள்முதலில் இ-நாம் முறையை மத்திய,மாநில அரசுகள் அமல்படுத்தும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் மொத்த கொள்முதல் செய்யும் வணிகர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கார்ப்பரேட் வணிகத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது. டோர் டெலிவரி முறை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருந்தால் தமிழ்நாட்டில் வியாபாரிகளே இருக்க முடியாது எனக் கூறினார்.

    மேலும் பேசிய அவர் மின் கட்டண அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் மின் கட்டணம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரக்கூடிய வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தந்த அமைச்சர் செந்தில் பாலாஜி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....