Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

    இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

    இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான பகுதிகளில் அவசர மருத்துவ ஊர்தி சேவை (ஆம்புலன்ஸ்) நிறுத்தப்பட்டுள்ளது. 

    இலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் அவதியுற்றுவருகின்றனர். மேலும், ஆளும் அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது, உணவு, சுகாதாரம், மருத்துவம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் நாள்கணக்கில் காத்திருந்து எரிபொருள் பெற்றுவருகின்றனர். இச்சூழலில், இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் அவசர மருத்துவ ஊர்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

    மேலும், அங்குள்ள ஊடகங்கள் அவசர மருத்துவ ஊர்தி சேவை எண்ணான 1990-ஐ அழைப்பதைத் தவிர்க்குமாறு தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை 3,700 மெட்ரிக் எரிபொருள் கொண்ட கப்பல் இலங்கையை வந்தடைந்தது. மேலும், 3,740 மெட்ரிக் டன் எரிபொருள் கொண்ட மற்றொரு கப்பலும் இலங்கை வந்ததாக அதிபர் மாளிகை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தாரா ஓ.பன்னீர்செல்வம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....