Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பீரங்கி ஒத்திகை நடத்தியதா வடகொரியா?- தென்கொரியா சந்தேகம்

    பீரங்கி ஒத்திகை நடத்தியதா வடகொரியா?- தென்கொரியா சந்தேகம்

    வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வடகொரியா கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தென் கொரியாவின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளதாவது :

    நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் எல்லையில் ஞாயிறு காலை பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. சில மணி நேரங்கள் இந்தச் சத்தம் தொடர்ந்தது. 

    இவ்வாறு தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    தென்கொரியாவின் இந்தக் கருத்துக்கு, “நாங்கள் ஆயுத பரிசோதனைதான் நடத்தினோம்” என்று விளக்கமளித்துள்ளது. அதேசமயம், அங்கு நடைபெற்றவை எம்மாதிரியான சோதனை என்பதையோ, எதுக்காக அந்த சோதனை  நடத்தப்பட்டது என்பதையோ வட கொரியா தெரிவிக்கவில்லை.

    மேலும், வாஷிங்டன் மற்றும் சியோல் அதிகாரிகள், வடகொரியா தனது ஏழாவது அணுசக்தி சோதனையை நடத்த தயாராகி வருவதாக எச்சரித்துள்ளனர். வடகொரியாவின் இந்த சோதனை “விரைவான மற்றும் வலிமையான”  எதிர்விளைவைத் தூண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கியது ரஷ்யா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....