Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை; ரூ.2000 அபராதம்

    விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை; ரூ.2000 அபராதம்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் சுமார் 9,000 கோடி ருபாய் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 

    2017ம் ஆண்டு தனது பிள்ளைகள் சித்தார்த் மல்லையா, லீன்னா மல்லையா மற்றும் தான்யா மல்லையா ஆகியோர் வங்கிக்கணக்குகளுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 310 கோடி) பணத்தை நீதிமன்ற உத்தரவை மீறி பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாகக் கூறி, மல்லையாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. 

    மேலும், 2017ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா தரப்பில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி  தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

    மல்லையாவை நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக பலமுறை உச்சநீதிமன்றம் வாய்ப்பளித்தது. எனினும் மல்லையா இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    மேலும், நீதிமன்ற உத்தரவு மீறி பணப்பரிவர்த்தனை செய்த மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

    இன்று, வழக்குக்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த யு.யு.லலித் தலைமையிலான அமர்வு,  விஜயமல்லையாவுக்கு 4 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து  உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் 9,000 ருபாய் கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, மார்ச் மாதம் 2016ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஜி.எஸ்.டி என்றால் என்ன?- பாகம் 1

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....