Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்190 நாடுகள்ல இருந்து தென்-கொரியா மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்... காரணம் என்ன தெரியுமா?

    190 நாடுகள்ல இருந்து தென்-கொரியா மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்… காரணம் என்ன தெரியுமா?

    மருத்துவமனை என்றவுடனே பலருக்கு பயம்தான் முதலில் வரும்! சிலருக்கு ஊசியின் மீதான பயம், சிலருக்கு மாத்திரைகளின் மீதான பயம், பலருக்கு பணத்தின் மீதான பயம். 

    மருத்துவமனைக்கு சென்றாலே, இருக்கும் பணமும் போய்விடுமோ என்ற அச்சம் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளின் மக்களின் இடையேயும் இருக்கத்தான் செய்கிறது. 

    அரசு மருத்துவமனை என்றால் தரத்தினை பற்றிய பயம் தொற்றிக்கொள்கிறது. இப்படியான எண்ணங்களை போக்க நிறைய நம்பிக்கையான நிகழ்வுகள், விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. 

    மருத்துவமனைகளை இலாப நோக்கமற்ற (non-profit) ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அமலில் இருக்கும்படியாக அறிவித்தால்? அதுவும் உலக தரத்துடன் இயங்கினால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்போதும் பலருக்கு தோன்றத்தான் செய்கிறது. 

    அப்படியாக மருத்துவமனைகளை இலாப நோக்கமற்ற ஒன்றாக அறிவித்த நாடு ஒன்றிருக்கிறது. அதுதான் சவுத் கொரியா! 

    அரசு இப்படியாக அறிவித்தமையால் அதை சவுத் கொரியாவில் இருக்கும் மருத்துவமனைகள் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். ஆதலால் அங்கிருக்கும் மருத்துவமனைகளில் மிகச்சிறந்த சிகிச்சை முறையை நம்மால் பெற முடியும். பெரும்பாலான மருத்துவமனைகளில் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையிலான சிகிச்சைகள் வழங்கப்பகின்றன. 

    ரோபோக்கள் சிகிச்சை அளிக்கும் முறையும் அங்கு அமலில் உள்ளது. 190 நாடுகளில் இருந்து சவுத் கொரியாவிற்கு சிகிச்சை பெறுவதற்காக மட்டுமே மக்கள் செல்கின்றனர் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. 

    புதுவை தமிழ் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா… வெளியான “கால் மானங்கள்”!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....