Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபோராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

    போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

    தமிழகத்தில் கொரோனா காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,300 தற்காலிக செவிலியர்களுக்கான பணிக்காலம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அரசு தரப்பில் பணிநீட்டிப்பு இல்லை என கூறப்பட்டதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், தற்காலிக செவிலியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

    இருப்பினும் செவிலியர்கள் தரப்பில், இனி தற்காலிக செவிலியர்களாக பணியில் சேர மாட்டோம் என்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் செவிலியர்கள் போராடி வந்தனர்.

    இந்நிலையில், இன்று சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர்ந்து 6 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....