Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடவு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடவு

    பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் உலக புகழ்ப்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது கட்டு என்ற பெயர்களில் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்றதாக பார்க்க்கப்படுவது மதுரையில் நடைபெறும் ஜல்லிகட்டுப் போட்டிகள். முன்னதாக பொங்கல் பண்டிகை அன்றே மதுரை அவனியாபுரத்திலும் அதற்கு மறுநாள் பாலமேடு மற்றும் அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 

    இந்நிலையில், இந்த ஆண்டு வருகிற ஜனவரி மாதம் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று ஊன்றப்பட்டது. இந்த நிகழ்ச்சி வாடிவாசல் அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. 

    அதே சமயம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக போட்டி நடத்தப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

    தற்போது வாடி வாசலில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....