Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி..

    சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி..

    சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது.

    சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி  நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நாளை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடங்கவுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக அரசும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் (பப்பாசி) இணைந்து நடத்துகின்றன. 

    அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தக கண்காட்சி இன்று தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 

    இந்தப் புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக ஆயிரம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியானது இன்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

    மேலும், சென்னையினூடே நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சென்னையில் இந்தாண்டு முதன்முறையாக ஜனவரி 16 முதல் 18 வரை மூன்று நாள்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை; வலைவீசும் போலீசார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....