Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரே நாளில் 5330 கோடியை இழந்த அமேசான்..

    ஒரே நாளில் 5330 கோடியை இழந்த அமேசான்..

    அமேசானின் பணிநீக்க நடவடிக்கையால் அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5330 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    அமேசான் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. 

    இதனால், அமேசான் ஊழியர்கள் பெருமளவில் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இது குறித்து அமேசான் ஊழியர்களுக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆதலால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அமேசானின் இந்த அறிவிப்பானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அதிர்வானது அமேசான் நிறுவனத்திலும் எதிரொலித்துள்ளது. 

    அதாவது, இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளில் அமேசான் நிறுவனத்திற்கு 675 மில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் இது 5330 கோடி ஆகும். 

    துப்பாக்கி, வாரிசு உள்ளிட்ட திரைப்படத்தில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் மரணம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....