Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடிக்கெட் இல்லை; எட்டி உதைத்த பரிசோதகர்கள் - வைரலான காணொளி

    டிக்கெட் இல்லை; எட்டி உதைத்த பரிசோதகர்கள் – வைரலான காணொளி

    பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பயணியை 2 டிக்கெட் பரிசோதகர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மும்பை-ஜெயின் நகருக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். அப்போது தோலி ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் அந்தப் பயணியிடம் பரிசோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்தப் பயணி மேல் இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது அவரிடம் டிக்கெட் இல்லாதது போல் தெரிந்ததும், அவரை கீழே இறங்குமாறு டிக்கெட் பரிசோதகர்கள் கூறியுள்ளனர். இதற்கு அந்தப் பயணி மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

    இதன் காரணமாக ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவர், அந்த நபரை கீழே இழுத்து தள்ளியுள்ளார். உடனே அருகில் இருந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகரும் உடன் சேர்ந்து அந்த நபரின் முகத்தில் உதைத்து கடுமையாக தாக்கினர். இதில் அந்தப் பயணி பலத்த காயமடைந்தார். 

    இந்தச் சம்பவத்தை அருகில் இருந்த மற்றொரு பயணி காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து, அந்த இரண்டு டிக்கெட் பரிசோதகர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....