Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்‘வேற்றுகிரக வாசியை கூகுள் எர்த்தில் கண்டேன்’ அமெரிக்க விவாத மேடையை சூடேற்றிய 45 வயது பெண்...

    ‘வேற்றுகிரக வாசியை கூகுள் எர்த்தில் கண்டேன்’ அமெரிக்க விவாத மேடையை சூடேற்றிய 45 வயது பெண் பார்த்த அதிர்ச்சி சம்பவம்!

    உலகில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு பத்திரிகைகளின் பயன்பாடு மிகப்பெரியது. இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அதனை மேம்படுத்தியது. இதனால், வானொலி, தொலைக்காட்சி, கணினி என அடுத்தடுத்து அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக தற்போது, உலக நிகழ்வுகளை அறிந்து கொள்வது எளிமையாகி இருக்கிறது என்றே சொல்லலாம். 

    இதேபோல, உலகின் எந்த பகுதியையும் முப்பரிமாண பிரதிபலிப்புடன் செயற்கைக்கோள் புகைப்படங்களாக பார்ப்பதற்கு கூகுள் எர்த் என்ற கூகுள் நிறுவன சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், வெறும் கண்களால் நாம் பார்க்க இயலாத, நமது பார்வைக்கு புலப்படாத சிறியது எதுவாகிலும் தெளிவாக தெரியச் செய்யும் வகையில் அதன் அம்சம் இருக்கிறது. 

    ஒரு நிலப்பகுதியின் புகைப்படங்களையும் முப்பரிமாணத்தில் நாம் பார்க்க இயலும். இதனை பலரும் தங்களின் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். 

    சில விசித்திரமான நிகழ்வுகளையும் இதன் உதவியுடன் பலர் தெரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கிறிஸ்டல் பேட்டர்சன் (45 வயது). அமெரிக்காவின் மெய்னி என்ற பகுதியில் மேப்பிள் நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் கடையின் விற்பனை பற்றி தெரிந்து கொள்ள அந்தப்பெண் கூகுள் எர்த் சேவையில் தேடி வந்துள்ளார். 

    இதையும் படிங்க: “என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி நண்பா” வைரலாகும் அஸ்வின், தினேஷ் கார்த்திக் வீடியோ

    இதில் அவருக்கு ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. இதைப்பற்றி பேட்டர்சன், வாகன பழுதுபார்க்கும் கடையை தேடியபோது, அந்த இடத்தில் கார் நின்றிருந்தது. அந்தக் காரில் ஓட்டுனர் ஆடைகளின்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். ஒரு வேளை பின்னால் உள்ள உருவத்துடன் திரிந்து, அப்படி தெரிந்து இருக்கலாம் என நினைத்தேன். அதனால், ஜூம் செய்து என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என பார்த்தேன். ஏனென்றால், அடுத்தவர் காரியங்களில் என்னவென்று? மூக்கை நுழைத்து பார்ப்பதில் எனக்கு அதிக ஆர்வம். இருப்பினும், கார் ஒன்றின் பின் இருக்கையில் ஏதோ ரகசிய வேலைக்காக, வேற்று கிரகவாசி ஒன்றுபதுங்கிய நிலையில் இருந்தது. 

    அதை மீண்டும் ஜூம் செய்து பார்த்தேன். காரின் பின்னால், வேற்று கிரகவாசியின் முகம் தெரிந்து, அதிர்ச்சியில் உறைந்து போனேன் என தெரிவித்துள்ளார். 

    மேலும் காரின் பின் இருக்கையில் நான் பார்ப்பது என்னவென்று யாரேனும் கூற முடியுமா? என்றும் அவர் கேட்டுள்ளார். கூகுள் எர்த்தில் எப்படி இதனை கண்டறிந்தீர்கள்? என ஒருவரும், தெளிவாக அது ஒரு வேற்றுகிரகவாசியே என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். 

    முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், பசிபிக் பெருங்கடலின் மேல் பறந்து செல்லும்போது, வேற்று கிரகவாசிகள் பலர் அந்த பகுதியில் தென்பட்டதாக பல்வேறு விமான நிறுவனங்களில் பணிபுரிந்த பல விமானிகள் தெரிவித்திருந்தனர். 

    வேற்று கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தேடல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நிலையில், பேட்டர்சனின் இந்த கண்டுபிடிப்பு, கூகுள் மேப்பின் வேடிக்கையை வேற்று கிரகவாசி பற்றிய விவாதத்தில் சூடேற்றியுள்ளது.

    இதையும் படிங்க: 5-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் ஆபரணத் தங்கத்தின் விலை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....