Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'சந்திரமுகியா மாறின கங்காவை பாக்கணும்'- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய அஷ்வின்

    ‘சந்திரமுகியா மாறின கங்காவை பாக்கணும்’- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய அஷ்வின்

    45 பந்துகளுக்கு அப்புறம் சந்திரமுகியா மாறின கங்காவை பாக்கணும் என்று கோலியின் ஆட்டம் குறித்து அஷ்வின் வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார். 

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டமிழக்காமல் ஆடிய விராட் கோலி எடுத்த 82 ரன்கள் தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின், விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். 

    சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படமான சந்திரமுகியில் வரும் பிரபல வசனத்தை சொல்லி கோலியின் அந்த இன்னிங்ஸை அஷ்வின் புகழ்ந்துள்ளார். 

    “விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல. ஏதோ பூந்துடுச்சு சத்தியமா.. அதுல ஒண்ணும் சந்தேகமே இல்ல.. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி.. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.

    இதையும் படிங்க: வெறும் 20 கோடி, 20 நாளில் 10 மடங்கு லாபம்! கேஜிஎஃப்-2வை பின்னுக்கு தள்ளி ‘காந்தாரா’ சாதனை

    கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து ‘ஒதலவா’ அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன். 

    அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. ‘இங்க அடி. அங்க அடின்னு’. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன்.. அப்படின்னு என் மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்.

    இதை சமுக வலைதள காணொளியாக அஷ்வின் பதிவு செய்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....