Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெறும் 20 கோடி, 20 நாளில் 10 மடங்கு லாபம்! கேஜிஎஃப்-2வை பின்னுக்கு தள்ளி 'காந்தாரா'...

    வெறும் 20 கோடி, 20 நாளில் 10 மடங்கு லாபம்! கேஜிஎஃப்-2வை பின்னுக்கு தள்ளி ‘காந்தாரா’ சாதனை

    கன்னட திரையுலகம் அதிக விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், தற்போது இங்கு அடுத்தடுத்து தரமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் ரிஷிப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

    இந்தத் திரைப்படம் கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்ப்ளே நிறுவனம் தான் இந்த காந்தாரா திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. 

    இந்தத் திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் மானசி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    காந்தாரா திரைப்படம் காட்டில் வாழும் ஆதிகுடிகளின் தொன்ம கதைகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. வனத்துறையினருக்கு காட்டுப் பகுதிகளில் வாழும் பூர்வக்குடிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் இந்தத் திரைப்படத்தில் ஆழமாக பேசப்பட்டுள்ளது. 

    இந்தப் திரைப்படம் மொத்தமாக 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தத் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

    அதேபோல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 50 கோடிக்கும் அதிகமாகவும், வெளிநாட்டில் 15 கோடிக்கு மேலும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதன் அடிப்படையில் கடந்த 20 நாட்களில் உலக அளவில் மொத்தமாக இந்தத்திரைப்படம் 175 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

    கன்னட திரையுலகில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் கேஜிஎப். இந்த திரைப்படத்துக்கு பிறகு தற்போது காந்தாரா திரைப்படம் வசூல் சாதனை மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: இனி மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்பதான் பணியாளர்கள் நியமனம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....