Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலக அரசியலில் எல்லோரையும் வியந்து பார்க்கச் செய்த இந்திய வம்சாவளியினர் யார் யார் தெரியுமா ?

    உலக அரசியலில் எல்லோரையும் வியந்து பார்க்கச் செய்த இந்திய வம்சாவளியினர் யார் யார் தெரியுமா ?

    பிரட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனால் உலகெங்கும் முக்கிய அரசியல் பொறுப்புகளில் கலக்கி வரும் இந்திய வம்சாவளியினர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம் .

    கமலா ஹாரிஸ்:

    தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், புது வரலாறு படைத்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்து வருகிறார்.அமெரிக்காவின் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை இவரைத் தான் சேரும் .அதுமட்டுமின்றி அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண்ணும் இவர்தான் .அடுத்த அமெரிக்க அதிபராக இவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது .

    பிரவீந்த்குமார் ஜக்னாத் :

    மொரீஷியஸ் பிரதமராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிரவீந்த்குமார் ஜக்னாத் (Pravind Kumar Jugnauth) பதவி வகித்து வருகிறார். இவர் மொரீஷியசில் ஏப்ரல் 2003 முதல் போர்க்குணமிக்க சோசலிச இயக்கம் கட்சியின் தலைவராகவும் , மேலும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ,பல அமைச்சங்களில் பதவி வகித்தவர்.பிரவீந்த்குமார் ஜக்னாத் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து மொரீஷியசிற்கு புலம் பெயர்ந்த யாதவ பிரிவைச் சேர்ந்த ஒரு இந்துக் குடும்பத்தில், வழக்கறிஞரான அனெரூட் ஜக்நாத்துக்கும், பள்ளி ஆசிரியரான சரோஜினி பல்லா என்பவருக்கும் பிறந்தவர்.

    லியோ எரிக் வரத்கர் :

    இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லியோ எரிக் வரத்கர் அயர்லாந்தின் துணை பிரதமராகவும் ,வர்த்தகத்துறை அமைச்சராகவும் 2020-ஆம் ஆண்டு ஜூனில் இருந்து பதவி வகித்தது வருகிறார்.43 வயதாகும் லியோ எரிக் வரத்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.லியோ எரிக் வரத்கர் அயர்லாந்தின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.

    இதையும் படிங்க: நயன்தாரா விவகாரத்தில் சிக்கப்போகும் தனியார் மருத்துவமனை! இன்று மாலை வெளிவரவுள்ள ரகசியம்

    ஆன்டோனியோ காஸ்டா:

    போர்ச்சுக்கலில் 2015ம் ஆண்டு முதல் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் அன்டோனியோ காஸ்டாவின் தந்தை இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர்.தாயார் போர்ச்சுக்கலை பூர்வீகமாக கொண்டவர்.

    சந்திரிகா பிரசாத் சண்டோகி:

    இதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சந்திரிகா பிரசாத் சண்டோகி என்பவர் 2020-ஆம் ஆண்டு முதல் தென் அமெரிக்க நாடான சூரினமின் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

    அனிதா ஆனந்த்:

    இவரைப்போலவே தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் என்பவரும் கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக 2021 -ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தது வருகிறார்.

    எஸ். ஆர். நாதன்:

    மேலும் தமிழகத்தை பூர்வீகம் கொண்ட மற்றொருவரான எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக பதவி வகித்தவர் .இவர் 1999 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, பின்னர் 2011 ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை பதவி வகித்தவர். சிங்கப்பூரில் நீண்ட காலம் சேவை செய்த அதிபர் எனும் பெருமையையும் பெற்றவர் .இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாதன், 1924-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி சிங்கப்பூரில் வி. செல்லப்பன் ,அபிராமி தம்பதிகளுக்கு பிறந்தவர்.

    மகேந்திர சௌத்திரி:

    ஹரியானவை பூர்விகமாக கொண்ட மகேந்திர சௌத்திரி பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான பிஜியின் பிரதமராக 1999 முதல் 2000 வரை பதவி வகித்தவர். மகேந்திர சௌத்திரி தாத்தா ஹரியானாவில் இருந்து பிஜிக்கு புலம் பெயர்ந்தவர்.

    இவர்களை தொடர்ந்து தற்போது பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

    இதையும் படிங்க:மனைவியை உயிருடன் புதைத்த கொடூரன்! கடவுள் போல் அலர்ட் கொடுத்து காப்பாற்றிய ‘ஆப்பிள் வாட்ச்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....