Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்.! மருத்துவமனையை இடிக்க மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு.!

    நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்.! மருத்துவமனையை இடிக்க மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு.!

    உத்திர பிரதேச மாநிலத்தில் டெங்கு நோயாளி ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ட்ரிப்ஸில் கலந்து ஏற்றி,அவர் உயிரிழந்ததாக கூறப்படும் மருதத்துவமனையை இடித்து தரைமட்டமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

    இந்தியா முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் டெங்கு காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பிராயக்ராஜ் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 32 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அதே மாவட்டத்தில் உள்ள ஜல்வா என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து, அந்த நபருக்கு ரத்த பிளேட்லெட்டுகள் குறைந்து, உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மருத்துவமனை நிர்வாகம் உள்ளூர் ரத்த வங்கியை நாடிய போது, அந்த ரத்த வங்கி பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் நிரப்பி கொடுத்துள்ளது. ரத்த வங்கி கொடுத்த அந்த பேக்கிங்கில் பிளாஸ்மா என்று எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்ததை ,நம்பி மருத்துவமனை நிர்வாகமும் நோயாளிக்கு அதை ட்ரிப்ஸ் மூலமாக ஏற்றியுள்ளது.

    இதையும் படிங்க: வா ராஜா வா!!..பிரதமர் ரிஷி சுனக் குறித்து விக்ரம் பகிர்ந்த வீடியோ…

    ஆனாலும் சிகிக்சை பலனளிக்காத நிலையில் ,டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான அந்த நபர் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு ,அங்கு பரிசோதித்து பார்த்ததில் , ஏற்றிய ரத்தத்தில் சாத்துக்குடி அல்லது இனிப்பு சுவையுடைய வேதிப்பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    பிறகு சிறிது நேரத்தில் அந்த நபர் உயிரிழக்கவே ,அந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதனைதொடர்ந்து இதுகுறித்த வீடியோக்களும், சமூக வலைத்தளத்தில் வைரலாகவே உத்திரபிரதேச அரசு அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தது.

    இந்நிலையில் பிரயாக்ராஜில் இயங்கி வரும் அந்த குளோபல் மருத்துவமனை, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக ககூறி, அதனை இடிப்பதற்கான நோட்டீசை உத்திரபிரதேச மேம்பாட்டு ஆணையம் அனுப்பியிருந்தது. மேலும் அதிகாரிகள் உத்தரவின்படி வெள்ளிக்கிழமைக்குள் அந்த மருத்துவமனையை காலி செய்ய வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....