Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமுந்துங்கள்.. தெற்கு ரயில்வேயில் பயிற்சியுடன் புதிய வேலைவாய்ப்பு

    முந்துங்கள்.. தெற்கு ரயில்வேயில் பயிற்சியுடன் புதிய வேலைவாய்ப்பு

    தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனுர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    தெற்கு ரயில்வே பணிமனைகளில் ட்ரடே ஆஃப்ரீன்ட்டிஸ் பணிக்கு 1,284 காலியிடங்கள் உள்ளன. 

    இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

    இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பு 15 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 

    பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை நடத்தப்படும். 

    இந்தப் பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000 ரூபாயும், ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் 7000 ரூபாயும் வழங்கப்படும். 

    இந்த தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் விவரங்களுக்கும் மற்றும் விண்ணப்பிக்கவும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். 

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    இதையும் படிங்க: “என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி நண்பா” வைரலாகும் அஸ்வின், தினேஷ் கார்த்திக் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....