Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்; மீண்டும் டாப் 10 க்குள் நுழைந்த விராட்!

    பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்; மீண்டும் டாப் 10 க்குள் நுழைந்த விராட்!

    பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் வாயிலாக ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேறியுள்ளார். 

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டமிழக்காமல் ஆடிய விராட் கோலி எடுத்த 82 ரன்கள் தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய அந்தப் போட்டியின் வாயிலாக தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதல் 10க்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார்.

    இதன்படி, ஐசிசி இன்று வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15-வது இடத்தில இருந்த விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி தற்போது 9-வது இடத்தில் உள்ளார். 

    இந்த தரவரிசைப் பட்டியலின்படி பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 849 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதேபோல் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். 

    ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை (அக்டோபர் 26 வரை) 

    1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 849 புள்ளிகள் 
    2. டெவோன் கான்வே (நியூசிலாந்து) – 831 புள்ளிகள் 
    3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) – 828 புள்ளிகள் 
    4. பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 799 புள்ளிகள் 
    5. ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) – 762 புள்ளிகள் 
    6. டேவிட் மலான் (இங்கிலாந்து) – 754 புள்ளிகள் 
    7. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 681 புள்ளிகள் 
    8. பதும் நிஸ்ஸங்க (இலங்கை) – 658 புள்ளிகள்
    9. விராட் கோலி (இந்தியா) – 635 புள்ளிகள் 
    10. முஹம்மது வசீம் (யுஏஇ) – 626 புள்ளிகள்

    சூர்யகுமார், கோலியை தவிர இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 16-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

    இதையும் படிங்க: “என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி நண்பா” வைரலாகும் அஸ்வின், தினேஷ் கார்த்திக் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....