Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இனி ஓவர் டைமிங் செய்ய முடியாது? தடுக்க வருகிறார் 'குட்டி எலி' சாம்சங் நிறுவனத்தின் புதிய...

    இனி ஓவர் டைமிங் செய்ய முடியாது? தடுக்க வருகிறார் ‘குட்டி எலி’ சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

    சாம்சங் நிறுவனம் முன்னெடுத்துள்ள புதிய ஐடியா உலகில் பலரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 

    வேலை..வேலை..என்று பலர் இங்கு குறிப்பிடப்பட்ட எட்டு மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்கின்றர். வேலை வாங்கப்படுகின்றனர். வேலைப்பளு அதிகரிக்க அதிகரிக்க உடல் சார்ந்து மட்டுமல்ல மனநலம் சார்ந்து பிரச்சினைகளும் அதிகரிக்கும்.

    அதேசமயம், ஒரே இடத்திலேயே உட்கார்ந்தபடி வேலை பார்ப்பதாலும் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க, கட்டுப்படுத்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல முன்னெடுப்புகளும் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: சந்தைக்கு புதுசு.. Moto edge 30 ultra விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!

    அதனின் ஒரு பகுதியாகவே, பணி நேரத்தில் தூங்கும் முறைகள், பிரேக் எடுத்து சற்று நேரம் வெளியே ரிலாக்ஸ் செய்வது, விளையாட்டு அறைகள் போன்ற பல செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், பிரபல சாம்சங் நிறுவனம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கட்டாயமாக வேலை செய்வதை தடுக்கும் வகையில் பேலன்ஸ் மவுஸ் (Balance mouse) என்ற புதிய வகை மவுஸை தயாரித்திருக்கிறது.

    இந்த மவுஸின் சிறப்பம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மவுஸ் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன் மூலம் ஊழியர்கள் ஷிஃப்டை தாண்டி வேலை பார்ப்பதை குறைக்கும். இதையும் மீறி வேலை செய்ய தொடங்கினால் சென்சர் மூலம் மவுஸின் மேல் பாகத்தில் இருந்து விலகி குட்டி எலியை போல அடிப்பாகம் ஓடிவிடும். இந்த ஐடியா உலகில் பலரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 

    ரூ.572 கோடி அபராதம்! கூகுள், மெட்டாவுக்கு பண வேட்டு வைத்த தென்கொரிய அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....