Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்பரோட்டா சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விவரம் உள்ளே!

    பரோட்டா சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விவரம் உள்ளே!

    நாம் சாப்பிடும் உணவு நமது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். சில உணவுகள் நம் நாவிற்கு மட்டுமே சுவையை கொடுக்குமே தவிர, எப்போதும் ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் எடுத்துக்கொள்ளும் முறையற்ற உணவுகளால், உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு பல தீவிர நோய்களை அவைகள் உண்டாக்குகின்றன. அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து பல உடல் உபாதைகளை உண்டாக்கக்கூடிய, பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய, பல நாடுகளில் உண்பதற்கே உகந்த உணவு இல்லை என்று தடை செய்யப்பட்ட ஒரு உணவு வகையை பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

    சத்தங்களில் பல வகைகள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோயில்களில், மசூதிகளில், ஆலைகளில், ரயில்வே கேட்களில் என்று மணியை குறித்து ஒலிக்கும் சந்தங்கள் எல்லாமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவையாகவே இன்று வரை இருந்து வருகின்றன. அதிலும் மாலையில் ஒலிக்கும் குயிலின் சத்தம் கூட எல்லோரையுடைய மனதிற்கும் நெருக்கமான ஒன்றுதான். அப்படியான ஒரு நெருக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் ஏற்படுத்தக் கூடிய விருப்பமான இன்னொரு சத்தமும் நம்மிடத்தில் இருக்கிறது. அதுதான் ”டடட டன்டன்.. டடட டன்டன்..” என்ற சத்தம்.

    என்னப்பா இது “டடட டன்டன்.. டடட டன்டன்” அப்டின்னு கேக்க வரிங்கதானே. அந்த சத்தத்த உணர்ந்தவங்க நிச்சயமா கண்டு புடுச்சுருப்பாங்க. ஆமாங்க அதுதான் மாலை வேலைகள்ல சாலைகள்ல நடந்து போகும் போது வரக்கூடிய கொத்து பரோட்டாவோட சத்தம். இந்த சத்தத்த கேட்டவுடனே எல்லாரோட முகத்துலையும் ஒரு புத்துணர்ச்சிய, மகிழ்ச்சிய, பரவசத்த பார்க்க முடியும்.

    அதிலும் எவ்வளவு தூரத்துல இருந்து இந்த சத்தத்த கேட்டா நிச்சயமா அது பரோட்டாவோட சத்தம்தான்னு உணராம இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதன் சுவையும் வாசனையும் அப்படியே நம்மள சுண்டி இழுத்து, நாவுல எச்சில ஊற வைக்கும். அந்த அளவிற்கு சாப்பாட்டு பிரியர்களின் ஆவலை தூண்டக் கூடிய ஒன்றுதான் இந்த பரோட்டா .

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வரும் இந்த பரோட்டா மைதா மாவில் செய்யப்படுகிறது. இன்றைய கால கட்டங்களில் பரோட்டா இல்லாத உணவகமே இருப்பது கிடையாது. அந்த அளவுக்கு 80-கால கட்டங்களில் இருந்தே மிகப் பிரபலமான உணவா, எல்லாரோட விருப்பத் தேர்வாக, இந்த பரோட்டா இன்னைக்கு இருந்து வருது.

    ஆனா அன்று தொட்டு இன்னைக்கு வரைக்கு பரோட்டாவ சாப்பிடுரது உடல் நலத்திற்கு தீங்கு தரக்கூடிய ஒன்னு அப்டின்னு சொன்னாலும் பலரும் இத சாப்பிட்டு கொண்டு தான் இருக்காங்க. ஆனால் இதில் உள்ள ஆபத்தான விஷயங்கள என்னைக்கு நாம உணர்வதே கிடையாது. அதை ஒரு பெரிய பொருட்டாகவும் எடுத்துக்கிறது இல்ல.

    காரணம் அந்த பரோட்டாவோட ருஷி அப்டி. அது நம்மள சுண்டி இழுத்து கூப்பிட்டுக்கிட்டே இருக்குறமாதிரி ஒரு உணர்வ தரக்கூடியது. அப்படிப்பட்ட இந்த பரோட்டாவோட மூலப்பொருள் அப்டின்னு பார்த்த அது மைதா. பிரச்சனையே இந்த மைதாவுல இருந்ததா ஆரம்பிக்குது. பரோட்டா மட்டும் இல்லங்க, இன்னும் பல வகை உணவுகளும், இந்த கொடிய மைதாவுல இருந்துதா தயாரிக்கப்படுது. பொதுவாக கோதுமை மாவு மஞ்சள் நிறத்துல இருக்கும்.

    ஆனா இதுல இருந்து பிரித்து எடுக்குற கழிவுதா மைதாவா நமக்கு கிடைக்குது. அதுவும் எப்படி தெரியுமா இதுல ‘Benzoyl peroxide’ அப்டினு சொல்லக்கூடிய ஒரு வேதிப்பொருள் அதாவது ரசாயன கலவைய கொண்டுதா வெண்மை நிறமா மாத்துறாங்க.

    இந்த Benzoyl peroxide அப்படிங்கிற இந்த ரசாயனம் எதுல இருந்து எடுக்குறாங்க தெரியுமா?

    நாம தலை முடியக்கு அடிக்கிற ஹேர் டை இருக்குள்ளயா, அதுல இருந்ததா. இந்த ராசாயனம் மாவில் உள்ள புரோட்டின் உடன் சேர்ந்து நீரழிவு நோய் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையுது. அதுமட்டுமில்லாம இந்த மைதா மாவுல ஆர்டிபிசியல் மினரல், ஆயில், பேஸ் மேக்கர், அஜினமோட்டோ போன்ற மற்ற சில வேதிப்பொருட்களையும்  சேர்க்குறதுனால, இந்த மைதாமாவு இன்னும் அபாயகரமான ஒன்னா மாறுது. இப்படியாப்பட்ட மைதாவுல செய்யக் கூடிய பரோட்டா ஜீரணத்திற்க்கு உகந்தது கிடையாது. காரணம் இதுல நார்சத்து, விட்டமின், கனிம சத்துக்கள் அப்டின்னு எந்த கலோரிகளுமே கிடையாது.

    அதுனாலதா இந்த உணவ குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது, அது நிறைய வயிற்று உபாதைகள உண்டாக்கும் அப்டின்னு சொல்றாங்க. பரோட்டா மட்டும் கெடையாது மைதா மாவுல செய்யக்கூடிய எந்த தின்பண்டங்களையும் குழந்தைகளுக்கு கொடுக்காம தவிர்க்கிறது நல்லது அப்டின்னு பெரியவங்க சொல்லுவாங்க.

    இப்படி அதீத பிரச்சனைகள் கொடுக்கக்கூடிய இந்த மைதா மாவ ஐரோப்பா, சீனா, லண்டன் போன்ற நாடுகள்ல விற்க கூடாது அப்டின்னு முழுமையாக தடை பண்ணிட்டாங்களாம். இன்னும் நம்ம இந்திய மாதிரியான நாடுகள்லதான் அதிகம் பயன்பாட்டுல இருக்கு.

    மைதாவ நாம உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்ற பிரச்சனைகள்லா வர்றதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு. அதுலையும் பெண்கள் இந்த உணவுப்பொருள அதிகம் சாப்பிடுறது தவிர்க்கணும் அப்டினு மருத்துவ தரப்புல சொல்லப்படுது. ஆனா நம்ம நாட்டுல இத எதையுமே நாம பெருசா எடுத்துக்குறது கெடையாது, அத பத்தின புரிதல் இருந்தாலும் நாவ கட்டு படுத்தனும் அப்டினு நெனைக்குறது கெடையாது.

    நமக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் அப்டின்னா, நம் நாட்டின் பாரம்பரிய உணவுப்பொருட்களான கேழ்வரகு, கம்பு, சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு வந்தா மட்டும்தா, நம்மை எந்தவித நோய்களும் அண்டாது. எனவே ஆரோக்கியமற்ற பரோட்டாவை தவிர்ப்போம். ஆரோக்கியமான வாழ்க்கைய நம் சமுதாயத்த்திற்கு எற்படுத்தி கொடுப்போம். ஓகே வா மக்களே.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....