Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் மீதான முழுமையான போர் தொடங்கவில்லை- ரஷ்ய அதிபர் புதின்

    உக்ரைன் மீதான முழுமையான போர் தொடங்கவில்லை- ரஷ்ய அதிபர் புதின்

    உக்ரைன் உடனடியாக எங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    கடந்த ஜூலை 7-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    “உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் செயல்படும் விதம் மேலும் படையெடுப்பைத் தீவிர படுத்துவதாக உள்ளது. உக்ரைன் அரசைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைன் வீரர் நிற்கும் வரை உக்ரைன் போராட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. உக்ரைனும் அந்நாடுகளின் பேச்சையே கேட்கிறது. 

    உண்மையை சொல்லப்போனால், உக்ரைன் மீதான முழுமையான நடவடிக்கைகளை ரஷ்யா இன்னும் தொடங்கவில்லை. தற்போது நடைபெறுபவை மிதமானவைதான். ரஷ்யாவின் நிபந்தனைகளை உடனடியாக ஏற்காவிட்டால், உக்ரைன் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். 

    உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் ஆனால் உக்ரைன் போர்களத்தில் ரஷ்யாவைத் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும்.” என்று பேசியுள்ளார். 

    கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா எடுத்த படையெடுப்பு இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஷின்சோ அபே மீதான அதிருப்தியால் கொன்றேன்- கைதானவர் வாக்குமூலம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....