Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான பதிவு ரத்து- தமிழக அரசு

    பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான பதிவு ரத்து- தமிழக அரசு

    பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, 2011ம் ஆண்டு முதல் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே, தங்களது கல்வித் தகுதிகளை நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, அனைவருக்கும் சமமான மூப்பு என்ற அடிப்படையில் வழங்கி வந்தது.

    இந்நிலையில், பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. என தெரிவித்துள்ளது.

    மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் தமிழக அரசு வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....