Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும்; வையாபுரி மணிகண்டன்

    ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும்; வையாபுரி மணிகண்டன்

    மாநில அந்தஸ்து பெற முடியாத நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்று அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்

    அரசியல் புரோக்கர் எழுதிக் கொடுத்ததை அரசியல் குழந்தைகளான அமைச்சர் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படியே படித்துள்ளனர் என்றும், புதுச்சேரியின் நிகழ்கால முதலமைச்சர் லஷ்மி நாராயணன் உட்பட நேற்று பேட்டி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

    ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை உள்ளதா எனவும்
    இவர்கள் சார்ந்துள்ள என்.ஆர் காங்கிரஸ் புதுச்சேரிக்காக எந்த போராட்டம் நடத்தியிருக்கிறது என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதுகில் குத்தியது என். ஆர். என்றும் என்னை தோற்கடித்ததே முதலமைச்சர் ரங்கசாமி தான் என்று குற்றம் சாட்டிய மணிகண்டன்

    பொய் சொல்வதன் விளைவாகத்தான் ரங்கசாமி போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோல்வியை தழுவினார் என்றும் அதிமுகவின் ஓட்டுக்களை பெற்று தான் என். ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இல்லையென்றால் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா எனவும் சவால் விடுத்தார்.

    ஒன்று மாநில அந்தஸ்து வாங்க வேண்டும் இல்லை என்றால் மக்களுக்காக தான் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறுபவர்கள் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாத நிலையில் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டு போராட முன்வர வேண்டும் என்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை உறுதிப்பட தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட மணிகண்டன் மாநில அந்தஸ்து கிடைக்காத பட்சத்தில் ராஜினாமா செய்வதை தவிர இவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை குற்றம் சாட்டினார்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்; கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....