Saturday, March 23, 2024
மேலும்
    Homeஆன்மிகம்புகழ்ப்பெற்ற சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!

    புகழ்ப்பெற்ற சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!

    அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. 

    விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. பிரதி தமிழ் மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும்.

    பூஜைக்கு இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வர்.

    சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 

    இந்நிலையில், அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல சதுரகிரி கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவில்தங்கவும், நீரோடைகளில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே அனுமதிக்கப்பட்ட நாளில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமானால் அனுமதி மறுக்கப்படும் என்று வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது; வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....