Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்; கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

    ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்; கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

    ராகுல் காந்தி, வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய ஒற்றுமை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பயணம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் பிரபலங்கள் பலரும் கலந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். 

    தற்போது ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் கடிதம் எழுதி உள்ளார். 

    அதில், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் மற்றும் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும். இந்தக் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் தேசிய நலன் கருதி ஒற்றுமை நடைபயணத்தை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேயர் பிரியா தலைமையில் இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் எப்போது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....