Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஷாலின் லத்தி திரைப்படம்; வெளிவந்த ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ என்ற பாடல்

    விஷாலின் லத்தி திரைப்படம்; வெளிவந்த ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ என்ற பாடல்

    லத்தி திரைப்படத்திலிருந்து ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

    தமிழ் திரைப்பட நடிகரான விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. கடைசியாக வெளிவந்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் சறுக்கலையே சந்தித்தது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்-2  போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வினோத் குமார் இயக்கியுள்ள லத்தி திரைப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

    விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது லத்தி திரைப்படத்திலிருந்து ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில், யுவன் மற்றும் சன்னா பாட இப்பாடல் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதும், பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

     

    ‘விரைவில் ராஜிநாமா செய்யப்போகிறேன்’ – எலான் மஸ்க் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....