Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பையால் 50 கோடிக்கு விற்பனையான மது..

    உலகக் கோப்பையால் 50 கோடிக்கு விற்பனையான மது..

    கடந்த 18-ஆம் தேதி 301 மதுக்கடைகள் மூலமாக ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    உலகம் முழுவதும் புகழ்பெற்ற விளையாட்டு போட்டிகளில் முதன்மையானது, கால்பந்து. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் கால்பந்திற்கு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களே உள்ளனர். ஆனாலும், நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் என்பது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 

    இந்தியாவிலேயே அதிக கால்பந்து ரசிகர்கள் உடைய மாநிலம் என்றால் கேரளா என்று பலரும் கூறுவர். அர்ஜெண்டினா, பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்களுக்கு அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்துள்ளனர். கேரளா ரசிகர்கள் கால்பந்தின் மீது தீவிரமானவர்கள் என்றே அனைவரும் அறிவர். அதை நிரூபனம் செய்யும் வகையில் கேரளாவில் அவ்வபோது நிகழ்வுகள் அரங்கேறி வரும். 

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பிக்கும் முன்னம் கூட, கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்றவர்களுக்கு ஆறுகளில் கட்-அவுட் வைத்தனர். இதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கூட சமீபத்தில் பாராட்டியது. 

    இந்நிலையில், கத்தாரில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக் காரணமாக, அந்நாளில் மட்டும் கேரள அரசால் நடத்தப்படும் 301 மதுக்கடைகள் மூலமாக ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கேரளாவில், பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.33-34 கோடிக்கு மட்டுமே மது விற்பனை நடைபெற்ற நிலையில், உலகக்கோப்பை காரணமாக கூடுதலாக 15 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கனவை நிஜமாக்கி, கனவுடன் உறங்கிய மெஸ்ஸி! வைரலான புகைப்படம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....