Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம், அஞ்சல் தலை வெளியீடு; காணொளி மூலம் வெளியிட்டார்

    அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம், அஞ்சல் தலை வெளியீடு; காணொளி மூலம் வெளியிட்டார்

    புதுச்சேரியில் நடைபெற்ற அரவிந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி காணொளி மூலம் வெளியிட்டார் – நாட்டின் இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை பிரதமர் மோடி பேச்சு.

    இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆரோவில் நிர்வாகக்குழு தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, நிர்வாகக்குழு உறுப்பினரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளிகாட்சி மூலமாக வெளியிட்டார். அதை விழா நடைபெறும் கம்பன் கலையரங்கில் அறிமுகம் செய்யபப்ட்டது.

    அரவிந்தரின் தபால் தலை மற்றும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி பேசும்போது, இன்று தேசத்தில் ஒரு வரலாற்று முக்கிய முக்கியமான ஒரு தினமாக இந்த தினத்தை இந்திய தேசத்தில் வாழ்கிற நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த வரிசையில் புதுச்சேரி மண்ணில் குறிப்பாக அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் ஒரு புதிய உணர்வை சக்தியை இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் கொடுக்கும் எனவும் இந்த மாதிரியான அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும் என்ற பிரதமர் மோடி நான் சில தினங்களுக்கு முன்பு காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது அந்த காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என்றவர்.

    அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானி ஆகவும் ஆன்மீக சக்தியாகவும் விளங்கினார் தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்ல ஆன்மீக சக்தியையும் மேலே கொண்டு வர வேண்டும் என்று விரும்பி ஆன்மீக சக்தியின் உறுதியான நிலையை சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார் மனிதனிலிருந்து இறைவன் வரை நாம் ஒருவரை போற்றுகிறோம் என்று சொன்னால் அவருடைய செயல்பாடுகளே காரணமாகும் என்றார். மேலும் இன்றைய பாரத இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் அந்த உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம் என பேசினார்.

    அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....