Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை; கேரள பகுதிகளுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய...

    141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை; கேரள பகுதிகளுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 141 அடியை எட்டிய நிலையில், கேரள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடைந்து வருகின்றனர். அணையின் அமைவிடம் கேரள மற்றும் தமிழக எல்லைகளில் அமைந்திருப்பதால், தற்போது அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது. 

    முல்லை பெரியாறு அணை மொத்தம் 152 அடி உயரம் கொண்டது ஆகும். இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகமானது. இதைத்தொடர்ந்து இன்று காலை 140 அடியை எட்டிய சமயத்தில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

    இதனிடையே இன்று காலை 6 மணி அளவில் அணையின் நீரைமட்டம் 141 அடியை எட்டியது. இதன் காரணமாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    அணையின் நீர்மட்டமானது 142 அடியை எட்டிய உடன், 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்படும். 

    மேட்டூர் அணை நிலவரம்: தொடர்ந்து உயரும் நீரின் அளவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....