Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; அதிமுக அன்பழகன்...

    கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; அதிமுக அன்பழகன் வலியுறுத்தல்

    புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் கனமழையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் பார்வையிட்டு, வீடு இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அன்பழகன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

    கடற்கரையில் கல் கொட்டுதல் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் தலைமை செயலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கற்களை கொட்டி செயற்கை மணற்ப்பரப்பை உருவாக்குவதால் அதற்கு அடுத்துள்ள பல மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தால் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இவ்வாறு சரியான திட்டமிடுதல் இன்றி சில இடங்களில் கொட்டப்பட்ட கற்களால் கனக செட்டிகுளம், பிள்ளைச் சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடல் அரிப்பை ஏற்படுகிறது. நேற்றைய பெய்த பெருமழையிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலோடு அடித்து செல்லப்பட்டன.வீடு, வாசல், வீட்டு உபயோக பொருட்கள்,மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட தனது உடைமைகளை முழுமையாக இழந்து நிற்கதியாய் பல மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கடலில் மூழ்கிய ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சமும், பாதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 8 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசு வழங்கும் அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் வெளியிட வேண்டும். அதேபோன்று வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் சேரமடைந்து பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து கொடுத்து வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் மாநில கழக துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மணவெளி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம்; அதிரடியாக முடிவெடுத்த தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....