Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாண்டஸ் புயல் பாதிப்பால் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மாண்டஸ் புயல் பாதிப்பால் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று ( 10.12.2022 )தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

    மாண்டஸ் புயல், மகாபலிபுரத்தில் இன்று அதிகாலை கரையை கடைந்தது. அப்போது 75 கிலோ மீட்டரில் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது மேலும் கோவளம், கிழக்கு கடற்கரை சாலையில், அதிகமாக காற்று வீசியது. மேலும் மரங்கள், மின் இணைப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதலே, கிழக்கு கடற்கரை சாலையில் மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதியில் உள்ள காசிமேடு துறைமுகம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும்,தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் முழுமையான சேத விவரங்கள் எடுக்கப்பட்டு அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் எந்தெந்த பகுதியில் முழுமையாக சேதமடைந்தது என்று கணக்கு எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ . இறையன்பு , புயல் மழையால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் . நேரு , இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது; ஸ்டாலின் பெருமிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....