Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது; ஸ்டாலின் பெருமிதம்

    பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது; ஸ்டாலின் பெருமிதம்

    திட்டமிட்டு செயலாற்றினால் எவ்வித பேரிடரியும் எதிர் கொள்ள முடியும் என்பதை தமிழக அரசு செய்து காட்டியுள்ளது.சேத விவரங்கள் முழுமையாக அறிக்கை பெறப்பட்ட பின் நிவாரணம் அறிவிக்கப்படும். பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு சேதங்களை பார்வையிட்ட பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதலே, கிழக்கு கடற்கரை சாலையில் மாண்டேஸ் புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதியில் உள்ள காசிமேடு துறைமுகம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

    புயல் வெள்ள பாதிப்புகளை நேற்று மதுரையில் இருந்து சென்னை திரும்பியது முதலே ஆய்வு செய்தேன். நேற்று இரவு முதல் விடிய விடிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு புயல் கடக்கும் பகுதிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து என தெரிவித்தார்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து நிவாரண பொருட்களை அளித்துள்ளேன்.மாண்ட்ஸ் புயல் தாக்கத்திலிருந்து தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஊழியர்களின் அற்பணிப்பு பணிகளால் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளினர்.

    நேற்று இரவு 5000 பேரும் மற்றும் காலையில் 20,000 பேரும் புயல் பாதிப்பு பணிகளை சீரமைப்பு பணிகளில் அரசுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள், மின்சாரத்துறை பணியாளர்கள் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக தெரிவித்தார்.மாநில அளவிளான 20.08 மி மீ மழை பதிவாகி உள்ளது.இப்படி ஒரு சூழல் அமையும் என எதிர்பார்த்து சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    3163 குடும்பங்களை சேர்ந்த 9130 பேர் நிவாரண முகாமகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்,400 மரங்கள் விழுந்து உள்ளது,900 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ள நிலைய 300 மோட்டார்கள் செயல்பாட்டில் உள்ளது.

    4 பேர் உயிரிழந்துள்ளனர், 98 கால் நடை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சேத விவரங்கள் முழுமையாக பெறப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு அரசு சார்பில் வெளியிடப்படும்.

    திட்டமிட்டு செயலாற்றினால் எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த அரசு நிரூபித்து காட்டியுள்ளதாக தெரிவித்தார்.புயல் பாதிப்பால் 600 இடங்களில் மின் கடத்திகள் பாதிக்கப்பட்டதை அடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 300 இடங்களில் மின் இணைப்பு சரி செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 300 இடங்களில் இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

    அரசின் நடவடிக்கைகளில் மக்கள் திருப்தியாக உள்ளனர். அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அதனால் தான் அரசால் நிலைமையை சமாளிக்க முடிகிறது. பெரும் புயலிலிருந்து சென்னை நகரம் தப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    மாண்டஸ் புயல் பாதிப்பு; மின்னல் வேக சீரமைப்புப் பணியில் தமிழக அரசு! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....