Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எலிகளில் இருந்து கொரோனா பரவலா? - அதிர்ச்சி தகவல்..

    எலிகளில் இருந்து கொரோனா பரவலா? – அதிர்ச்சி தகவல்..

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள எலிகள் மூலம் புதிய வகை கொரோனா பரவலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    அமெரிக்க நாட்டில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி (American society for microbiology) என்ற அறிவியல் அமைப்பு நுண்ணுயிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. 

    இந்நிலையில், இந்த அறிவியல் அமைப்பு சமீப காலத்தில் கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகைகள் எலிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

    வைரலாஜிக்கல் ஆய்வுகள் மற்றும் மரபணு வரிசைமுறைக்காக 79 எலிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டதில் 13 எலிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆராய்ச்சியை தலைமை ஏற்று நடத்திய டாக்டர் ஹென்றி வான், தங்களை பொறுத்தவரையில் ஏழைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்பதற்கான முதல் உறுதியான ஆதாரத்தை கொடுத்த ஆய்வு இதுதான் என தெரிவித்தார்.

    மேலும் நியூயார்க் நகரில் இருக்கும் பல எலிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் இது விரைவில் வெவ்வேறு திரிபுகளில் மாறலாம் என்றும் இது மனிதர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

    நியூசிலாந்து வெற்றியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....