Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநியூசிலாந்து வெற்றியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..

    நியூசிலாந்து வெற்றியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..

    இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் தற்போது நடைபெற்று வருகிறது. 

    டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஏறத்தாழ நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய உள்ளது உறுதியாகவிட்டது. 

    இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இந்தப் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், டிராவை நோக்கி போட்டி செல்வதால் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நியூசிலாந்து கையில் இருந்தது. 

    இதனால், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வந்த நியூசிலாந்து இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை இந்திய ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். இச்சூழலில், நியூசிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. 

    இதன்மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. வருகிற ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

    மேலும், இப்போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....