Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரின் விடுதலையை ரத்து செய்ய கோரிக்கை., நாராயணசாமி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரின் விடுதலையை ரத்து செய்ய கோரிக்கை., நாராயணசாமி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து மோடி தலைமையிலான அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து 7 பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்

    முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி காந்தி திடலில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ. வி. சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றமே தனது முடிவை மாற்றிக் கொள்வது நியாயமல்ல என்று குறிப்பிட்டார். குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவின் மீது தமிழக ஆளுநர் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் காலதாமதம் படுத்தியதே ஏழு பேர் விடுதலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், சோனியா, ராகுல் வேண்டுமென்றால் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னிக்கலாம் ஆனால் கட்சி தொண்டனாக நாங்கள் அதை மன்னிக்க மாட்டோம் என்றார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் தனது வாதங்களை தெளிவாக எடுத்து வைக்காததே இவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்றும், மோடி தலைமையிலான அரசு உடனடியாக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து ஏழு பேர் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாராயணசாமி, அப்படி இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

     

    இதையும் படிங்கமழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....