Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்பல்வேறு சாதனைகளுக்காக கனவு மாணவர் விருது; தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

    பல்வேறு சாதனைகளுக்காக கனவு மாணவர் விருது; தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

    டாக்டர் அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு சாதனைகள் புரிந்ததற்காக கனவு மாணவர் விருது பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    ஆண்டுதோறும் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுத்தப்பட்ட சிறந்த 100 மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுத்தப்பட்ட பட்டியலில் புதுச்சேரியை சேர்ந்த விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் மூலம் சாதனை புரிந்த மாணவர்கள் பிரகதீஷ், ஜெயசூர்யா, வினோத், கவுஷிகா, வாணிஸ்ரீ, ஜோதிகா, நசிரா பேகன், ஸ்ரீ கஜலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது.

    கனவு மாணவ விருதைப் பெற்ற மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி புத்தகங்களை வழங்கினார். மேலும் மாணவ மாணவிகளை விழிகள் அறக்கட்டளை நிர்வாகி பிரேம்குமார் மற்றும் செயலாளர் கீர்த்தனா ஆகியோரும் பாராட்டினர்.

    தில்லியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....