Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவின் அதிருப்திக்கு பதிலடி கொடுத்த இந்தியா

    இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவின் அதிருப்திக்கு பதிலடி கொடுத்த இந்தியா

    இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    உத்தரகாண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது, இந்தியா-சீனா இடையேயான தீர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், சீனா தெரிவித்திருப்பதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளதாவது:

    இந்தியா-அமெரிக்கா இடையே நடந்து வரும் ராணுவப் பயிற்சிக்கும் ஒப்பந்தத்துக்கும் எவ்வித தாக்கமும் இல்லை. 

    சீனா ஏற்படுத்திய தனது 1993 மற்றும் 1996 ஆண்டு ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது. 

    இந்தியா எந்த நாட்டுடன் ராணுவப் பயிற்சி நடத்துகிறது. யாருடன் ராணுவப் பயிற்சி நடத்தவில்லை என்பது இந்தியாவின் உரிமை. இதை எந்த மூன்றாம் தரப்பும் அதிகாரம் செய்ய முடியாது. 

    எங்கள் ராணுவப் பயிற்சியில் மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. 

    இந்தியா-சீனா இடையே லடாக்கில் நிலவும் முட்டுக்கட்டை மற்றும் அமைதி குறித்தும் பல நிலைகளில் முயற்சிகள் நடந்து வருகிறது. அது நல்ல பலனைத் தரும் என்று நம்புகிறோம். 

    அதேபோல் சீனாவில் பின்பற்றப்படும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    கால்பந்து உலகக் கோப்பை; நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் மற்றும் ஸ்பெயின்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....