Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் மற்றும் ஸ்பெயின்..

    கால்பந்து உலகக் கோப்பை; நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் மற்றும் ஸ்பெயின்..

    நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    கத்தாரில் நடப்பாண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றுள் குரூப்- இ பிரிவில் ஜெர்மனி-கோஸ்டா ரிகா அணிகளும், ஜப்பான்-ஸ்பெயின் அணிகளும் மோதின.

    ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிக்கா மோதிய போட்டியில் ஜெர்மனி ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 10-ஆவது நிமிடத்தில், ஜெர்மனி கோல் அடித்து, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

    இதைத்தொடர்ந்து, 58 ஆவது நிமிடத்திலும், 70-ஆவது நிமிடத்திலும் கோஸ்டா ரிக்கா கோல் அடிக்க, ஜெர்மனி ஸ்தம்பித்தது. 2-0 என்ற கணக்கில் கோஸ்டா ரிக்கா முன்னிலை வகிக்கத் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஜெர்மனி மீண்டும் கோல் அடித்து 2-2 என்று சமனில் இருந்தது. 

    பின்னர், 85 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி கோல் அடித்து  4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியது. 

    ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணியினர் மோதிய ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 11-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து நெடுநேரமாக இரு அணிகளும் அடுத்த கோல்களை அடிக்க முயற்சித்தது.

    இந்நிலையில், ஆட்டத்தின் 48-ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி கோல் அடித்து 1-1 என்று சமநிலை வகிக்க, 51-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை ஜப்பான் வீழ்த்தியது. 

    இதன் மூலம், குரூப் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடனும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும், கோல் வேறுபாடு அடிப்படையில்  ஸ்பெயின் தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பனி வந்துடுச்சு மழை வராது புராணத்த தூக்கி போடுங்க..! தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் மழைச் செய்தி என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....