Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதில்லியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை

    தில்லியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை

    தலைநகர் தில்லியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4 ஆம் தேதி வரை பாதுபானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தில்லி மாநகராட்சி விதித்துள்ளது. 

    தலைநகர் தில்லியில் மாநகராட்சியின் கீழ் 250 வார்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரே கட்டமாக வருகிற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும். மேலும் அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும். 

    தில்லியில் தற்போது, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என 3 கட்சிகளிடையேயும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே, மாநகராட்சித் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக, தில்லியில் டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து கலால் வரித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. 

    அதே சமயம், வருகிற 7 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிவுகள் வெளியிடப்படுவதால், அன்றைய தினமும் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப், பார்கள் என அனைத்திற்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    மெத்தன போக்கினால் 8 உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்- அண்ணாமலை குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....