Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய குரோஷியா வெளியேறிய பெல்ஜியம்

    கால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய குரோஷியா வெளியேறிய பெல்ஜியம்

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நாக்-அவுட் சுற்றுக்கு குரோஷியா அணி முன்னேறியது.

    2022-ஆம் ஆண்டிற்கான சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது கத்தாரில் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுகளுக்கு அணிகள் முன்னேறி வருகின்றன. 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற 4 ஆட்டங்களில் குரூப் எஃப் பிரிவில் உள்ள கனடா மற்றும் மொராக்கோ, குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் நடைபெற்றது. 

    கனடா மற்றும் மொராக்கோ

    கனடா மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் தொடங்கிய 4-ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணி கோல் அடித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து, 23-ஆவது நிமிடத்தில் மீண்டும் மொராக்கோ அணி கோல் அடிக்க 2-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

    இந்த முன்னிலையை தகர்த்தெறிய கனடா அணிகள் எவ்வளவு முயன்றும் ஈடேறவில்லை. இருப்பினும், ஆட்டத்தின் 40-ஆவது நிமிடத்தில் கனடா அணி ஒரு கோல் அடித்தது. இதன் பின்பு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 

    ஆட்டத்தின் முடிவில், 2-1 என்ற புள்ளி கணக்கில் மொராக்கோ அணி கனடா அணியை வீழ்த்தியது. மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

    குரோஷியா மற்றும் பெல்ஜியம்

    நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் எவ்வளவு முயன்ற பின்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 

    இதனால், 0-0 என்ற கணக்கில் குரோஷியா மற்றும் பெல்ஜியம் ஆட்டமானது சமனில் முடிவடைந்தது. குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, பெல்ஜியம் அணி கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. 

    இதுவரையில் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ள அணிகள்; 

    பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா, ஜப்பான், ஸ்பெயின் 

    கால்பந்து உலகக் கோப்பை; நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் மற்றும் ஸ்பெயின்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....