Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 63 வகையில் மாமிசம்; நடவடிக்கை எடுத்த வனத்துறை...

    புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 63 வகையில் மாமிசம்; நடவடிக்கை எடுத்த வனத்துறை…

    புதுச்சேரி நரிக்குறவர்கள் குடியிருப்பில் விற்பனைக்காக வைத்திருந்த மான்கறி உள்பட பல்வேறு பறவைகளையும், துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி ஒதியம் பட்டு அடுத்த நரிக்குறவர் காலணியில் இன்று அதிகாலையில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புத்தாண்டு விருந்துக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பருந்து, கிளி, பால் ஆமை, கொக்கு, ஆள்காட்டி குருவி, கொக்கு நாரை உள்ளிட்ட 63 வகையான பறவைகள் மற்றும் முயல் கறி, உடும்பு கறி, மான் கறி, ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், பறவைகள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள், கன்னி வலைகள், மற்றும் கொக்கு மருந்து, ஆகியவைகளையும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறை துணைக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஸ்ரீதர் கூறியதாவது;

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக க்யூ. ஆர். கோடு உருவாக்கி whatsapp குழு மூலம் ஆன்லைனில் பறவைகள் மற்றும் மான்கறிகளை விற்பனை செய்து வருவதை ஒரு சிலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

    தற்போது புத்தாண்டு விருந்துக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பறவைகள் மற்றும் மான் கறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இந்த வியாபாரம் நடந்துள்ளது அவர்கள் முழு விபரத்தையும் சேகரித்து வருவதாகவும், பறவைகள் வேட்டையாடுவதும், அவற்றை வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை வனத்துறை மற்றும் காவல் துறை மேற்கொண்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்திய அஞ்சல் துறையில் வேலை…விண்ணப்பிக்க முந்துங்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....