Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇளம்பெண் சடலத்தை காரில் இழுத்துச் சென்ற கொடூரம்; தலைகுனிகிறேன் என ஆளுநர் பதிவு

    இளம்பெண் சடலத்தை காரில் இழுத்துச் சென்ற கொடூரம்; தலைகுனிகிறேன் என ஆளுநர் பதிவு

    தில்லியில் இளம்பெண் ஒருவர் சடலமாக காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து தில்லி துணை நிலை ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். 

    தலைநகர் தில்லியில் இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை கன்ஜாவ்லா-சுல்தான்புரி பகுதிக்கிடையே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 5 பேருடன் வந்த கார் ஒன்று, அப்பெண் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் உயிரிழந்த நிலையில் அப்பெண்ணின் சடலம்  காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி துணை ஆளுநர் கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். 

    இந்தச் சம்பவம் குறித்து, தில்லி துணை நிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா, “சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மனிதாபிமானமற்ற கொடுங்குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    தில்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சமூகம் பொறுப்பானதாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

    மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அஞ்சல் துறையில் வேலை…விண்ணப்பிக்க முந்துங்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....